நடிகர் ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

1586319527 5723
1586319527 5723

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஆர்யா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், ஆர்யா -சாயிஷா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யா -விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் இணைந்து எனிமி படத்தில் நடித்து வருகின்றனர். ஆர்யா விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார்.

ஆர்யா இரட்டை சந்தோஷத்தில் இருப்பதாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.