சமந்தா கர்ப்பமானதால்தான் சினிமாவில் ஓய்வெடுக்கிறாரா?

samayam tamil 5
samayam tamil 5

சினிமாவில் இருந்து ஒரு குட்டி ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று சமந்தா தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் கர்ப்பமாக இருப்பதாக பேச்சு கிளம்பியிருக்கிறது.

சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு அவரவர் படங்களில் இருக்கிறார்கள். சமந்தா நடிக்க வந்து 11 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார். இந்த 11 ஆண்டுகளில் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் சில மாதங்களுக்கு ஓய்வு எடுக்க முடிவு செய்திருக்கிறார்.

கையில் இருக்கும் படங்கள் தவிர்த்து புதுப் படங்கள் எதையும் சமந்தா ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் பிரேக் எடுக்கிறார் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. சமந்தாவுக்கு திருமணமானதில் இருந்து இன்னும் கர்ப்பமாகவில்லையா என்று அவரிடம் ரசிகர்கள் அடிக்கடி கேட்கிறார்கள். ஒரு கட்டத்தில் கடுப்பான சமந்தா, எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தனக்கு தெரியும் என பதில் அளித்தார். இந்நிலையில் மீண்டும் கர்ப்ப பேச்சு கிளம்பியிருக்கிறது.

முன்னதாக சமந்தா, சமூக வலைதளங்களில் தன் பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் குடும்ப பெயரான அகினேனியை நீக்கினார். அதை பார்த்தவர்கள் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே பிரச்சனை, விவாகரத்து பெறப் போகிறார்கள். அதனால் தான் அகினேனியை கழற்றிவிட்டுவிட்டார் என்றார்கள். விவாகரத்து பேச்சு கிளம்பிய வேகத்தில் தன் கணவருடன் சேர்ந்து கோவாவில் நிலம் வாங்கியிருக்கிறார் சமந்தா. அங்கு பண்ணை வீடு கட்டப் போகிறாராம்.