நடிகை நமீதா தன் 17 வயது புகைப்படத்தை வெளியிட்டார்!

samayam tamil 1
samayam tamil 1

நடிகை நமீதா தன் 17 வயதில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பழைய நினைவுகளை அசைபோட்டிருக்கிறார்.

கேப்டன் விஜயகாந்தின் எங்கள் அண்ணா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நமீதா. அவர் தமிழ் தவிர்த்து கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தன் கவர்ச்சியால் தமிழக ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்தவர் நமீதா.

அவர் தன் ரசிகர்களை அன்போடு மச்சானஸ் என்று அழைப்பார். கொரோனா நேரத்தில் பழைய விடயங்கள் பற்றி பேசுவதில் நடிகைகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் தன் 17 வயதில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு நமீதா கூறியிருப்பதாவது,

17 வயதில் பெரிய கனவுகளுடன் பெரிய நகரமான மும்பைக்கு வந்தேன். என் முதல் புகைப்படம். அதை நடத்தியவர் லெஜண்ட் நடிகரும், புகைப்படக் கலைஞருமான போமன் இரானிஜி. இது நடந்தது 2000ம் ஆண்டு.

என் பெற்றோருடன் மும்பையில் இருந்தேன். இந்த படம் ஒரே நாளில் நடத்தப்பட்டது. போமன் இரானி எங்களுக்கு எல்லாம் பெரிய பீட்சா வாங்கிக் கொடுத்தார். இந்த புகைப்படங்கள் மூலம் தான் நான் ஃபெமினா மிஸ் இந்தியா 2001 போட்டிக்கு தேர்வானேன் என தெரிவித்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, எங்கிருந்து எங்கு வந்திருக்கிறீர்கள் பெரிய சாதனை தான் வாழ்த்துக்கள் அழகி என தெரிவித்துள்ளனர்.

ஸ்ருதி ஹாசன் தன் 17 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நமீதாவும் தான் 17 வயதில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.