இட்டர்னல்ஸ் படத்தின் சுவரொட்டியை வெளியிட்ட மார்வெல்

1630908010 5208
1630908010 5208

மார்வெல் சிறந்த கதாநாயகன் வரிசையில் அடுத்த படமான இட்டர்னல்ஸ் படத்தின் தமிழ் சுவரொட்டியை மார்வெல் வெளியிட்டுள்ளது.

ஹொலிவுட் சிறந்த கதாநாயகன் படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் மார்வெல் ஸ்டூடியோஸிற்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக மார்வெல் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மாதம் ஒரு படம் என்ற வேகத்தில் படங்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த வாரம் வெளியான மார்வெலின் ஷாங் ச்சி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்த வெளியீடான இட்டர்னல்ஸுக்கு மார்வெல் தயாராகி வருகிறது. நவம்பர் 5ல் வெளியாக உள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் சுவரொட்டியை மார்வெல் இந்தியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.