இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக்பொஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுவரை தமிழில் நான்கு பருவங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது ஐந்தாவது பருவம் ஆரம்பமாக உள்ளது.
இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரம் கசிந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், தற்போது பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, ‘பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.
இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.