வெளியானது அண்ணாத்த பட புகைப்படம்!

samayam tamil 7
samayam tamil 7

அண்ணாத்த படத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பிரச்சனை எல்லாம் ஏற்படுவதற்கு முன்பே அண்ணாத்த படப்பிடிப்பு துவங்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார்கள். அதன் பிறகு படப்பிடிப்பை ஒரு வழியாக நடத்தி முடித்துவிட்டனர்.


அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையில் அண்ணாத்த பட புகைப்படம் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. பார்த்த ரசிகர்களோ, தலைவருக்கு வயசே ஆகாது, அதை பார்த்தால் தெரிகிறது. அண்ணாத்த திருவிழா ஆரம்பம் என தெரிவித்தனர்.

அதில், நாடி நரம்பு முறுக்க முறுக்க, ரத்தம் மொத்தம் கொதிக்க கொதிக்க, அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க, தொடங்குது ஓங்கார கூத்து என்று கூறி ரஜினி கெத்தாக வருவதை பார்த்து ரசிகர்கள் மெர்சலாகிவிட்டனர்.

அதிலும் ரஜினியை இந்த அளவுக்கு இளமையாக, சிவா காட்டியிருப்பது ரசிகர்களின் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்துவிட்டது.

அதை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

இந்த தீபாவளி தரமாக இருக்கப் போகிறது. தலைவரை இந்த அளவுக்கு காட்டிய சிவாவுக்கு நன்றி. இத்தனை நாட்களாக காத்திருந்தது வீண் போகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.