தன்னை விட 9 வயது சிறிய நடிகருடன் நடிகை மூன்மூன் தத்தா காதல்!

samayam tamil 9
samayam tamil 9

தன்னை விட 9 வயது சிறிய நடிகரான ராஜ் அனத்கத்தை காதலிப்பது குறித்து எழுந்த பேச்சு பற்றி விளக்கம் அளித்திருக்கிறார் நடிகை மூன்மூன் தத்தா.

நடிகர் ராஜ் அனத்கத்துடன் சேர்த்து வைத்து தன்னை மோசமாக விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை மூன்மூன் தத்தா.

இந்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் மூன்மூன் தத்தா. அவர் தாரக் மேத்தா கா ஊல்டா சஷ்மா தொடரில் தன்னுடன் சேர்ந்து நடித்து வரும் ராஜ் அனத்கத்தை காதலிப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது. தன்னை விட 9 வயது சிறியவரான ராஜை மூன்மூன் தத்தா காதலிப்பதாக வெளியான தகவல் அறிந்த சமூக வலைதளவாசிகள் அவரை கிண்டல் செய்தார்கள்.

தான் ராஜை காதலிப்பதாகக் கூறி கிண்டல் செய்தவர்களையும், ஒரு சில ஊடகங்களையும் விளாசியிருக்கிறார் மூன்மூன் தத்தா. தன்னை இந்தியாவின் மகள் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுவதாக அவர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். தன்னை அசிங்கப்படுத்தி பேசியதால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக மூன்மூன் கூறியிருக்கிறார்.

கிண்டல் செய்தவர்கள் பற்றி மூன்மூன் தத்தா சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, பொது மக்களே, உங்களிடம் நான் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் கமெண்ட் பகுதியில் இந்த அளவுக்கு மோசமாக கருத்து தெரிவித்து, அதுவும் படித்தவர்கள் கூட இப்படி செய்து நாம் முன்னேறாத சமூகம் என்று நிரூபித்துவிட்டீர்கள். நீங்கள் சிரிக்க, பெண்களை வைத்து அசிங்கப்படுத்துகிறீர்கள் என்றார்.

நீங்கள் கிண்டல் செய்வதால் ஒருவருக்கு மன உளைச்சல் ஏற்படும் என்பது பற்றி எல்லாம் உங்களுக்கு கவலை இல்லை. 13 ஆண்டுகளாக இந்த துறையில் இருக்கிறேன். ஆனால் என்னை அசிங்கப்படுத்த 13 நிமிடம் கூட ஆகவில்லை. அடுத்த முறை யாருக்காவது மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை செய்து கொண்டாலோ உங்களின் வார்த்தைகள் தான் அதற்கு காரணமா என்று சிந்தித்துப் பாருங்கள் என மூன்மூன் தத்தா மேலும் தெரிவித்துள்ளார்.