“கொரோனா குமார்” ஆக களமிறங்கும் சிம்பு

202109191146264039 Tamil News Tamil cinema Simbu next movie corona Kumar SECVPF
202109191146264039 Tamil News Tamil cinema Simbu next movie corona Kumar SECVPF

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரௌத்திரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார்.

 பின்னர் ‘காஷ்மோரா’, ‘ஜூங்கா’ போன்ற படங்களை இயக்கிய கோகுல், அடுத்ததாக ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். முதலில் இப்படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சிம்பு கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

202109191146264039 1 ck5g. L styvpf

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு, ஐ.பி.எல். தொடரில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பு பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், அப்பாடலை இன்று வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். ‘கொரோனா குமார்’ படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளார்.