ரசிகர்களை கவர்ந்த அண்ணாத்த பட முதல்காட்சி!

samayam tamil 1 2
samayam tamil 1 2

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் மாதம் 4ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் அண்ணாத்த முதல்காட்சி அக்டோபர் 14ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. அறிவித்தபடி முதல்காட்சியை வெளியிட்டுள்ளனர்.

கிராமத்தான குணமாத்தானே பாத்திருக்க, கோபப்பட்டு பார்த்தது இல்லையே என்று ரஜினி கூறுவதுடன் முதல்காட்சி துவங்குகிறது. காட்டாறு அவனுக்கு கரையும் கிடையாது, தடையும் கிடையாது என்று கூறி ரவுடிகளை அடித்து துவம்சம் பண்ணுகிறார் ரஜினி.

தலைவர் தீயாக இருக்கிறார். இருக்கு, தீபாவளிக்கு தரமான சம்பவம் இருக்கு. இது போதும் இயக்குநர் சிவா என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய அண்ணாத்த தலைப்பு பாடல் வெளியாகி ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்தது. அதன் பிறகு வெளியிடப்பட்ட சாரல் காற்றே காதல் பாடல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த காணொளியில் ரஜினி இளமையாகவும், துடிப்பாகவும் இருப்பதாக ரசிகர்கள் பெருமைப்பட்டார்கள்.