ராஜமௌலியுடன் இணையும் மகேஷ் பாபு

SS Rajamouli 1200x900 1
SS Rajamouli 1200x900 1

பாகுபலி-2 படத்தை அடுத்து ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கியுள்ளார் ராஜமௌலி.

இப்படத்தின் அனைத்துக்கட்ட பணிகளும் முடிவடைந்து விட்டது. வருகிற ஜனவரி 7ஆம் திகதி இப்படம் திரைக்கு வருகிறது.

இப்படதிற்கு பின் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார் ராஜமௌலி. அப்படம் குறித்து மகேஷ்பாபு அளித்த ஒரு பேட்டியில், ராஜமௌலி இயக்கத்தில் நான் நடிக்கும் படம் இந்திய படமாக உருவாகிறது.

அனைத்து இந்திய மொழிகளிலும் பிரமாண்டாக தயாரிக்கப்பட உள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

இப்படம் குறித்த அறிவிப்பை விரைவில் ராஜமௌலி அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார் மகேஷ்பாபு.