தலைவரை இப்படி பார்த்து எவ்வளவோ நாளாகிவிட்டது என்ற ரஜினி ரசிகர்கள்!

1615016732 0691 1
1615016732 0691 1

ரஜினியின் அண்ணாத்த படத்தில் வரும் மருதாணி பாடலின் இசைப்பாடல் காணொளி வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் அண்ணாத்த. அந்த படம் தீபாவளி பண்டிகை விசேடமாக நவம்பர் மாதம் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

முன்னதாக அண்ணாத்த படத்தின் தலைப்பு பாடலின் காணொளி வெளியாகி ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்தது. எஸ்.பி. பி. பாடிய தலைப்பு பாடலை கேட்ட ரசிகர்கள் கண்கலங்கிவிட்டனர். அதன் பிறகு சாரல் காற்றே பாடலின் இசைப்பாடல் காணொளி வெளியானது.

இந்நிலையில் மூன்றாவது பாடலான மருதாணி அக்டோபர் 18ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. அறிவித்தபடி பாடலின் இசைப்பாடல் காணொளியை வெளியிட்டுள்ளனர்.

ரஜினியை இப்படி பார்த்து எவ்வளவு நாளாகிவிட்டது நன்றி சிவா என்று கூறி நவம்பர் 4ம் திகதிக்காக காத்திருக்கின்றனர். தலைவரின் பாத்திரம் முக்கியமான படமாக இது அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ளனர்.