கடைசியாக ஒரு முறை குடும்பத்தாரை பார்த்துவிட்டு கண் மூடிய மெட்டி ஒலி விஜி!

samayam tamil 9
samayam tamil 9

ஈரோட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்த மெட்டி ஒலி சீரியல் புகழ் உமா மகேஸ்வரி தன் குடும்பத்தாரை கடைசியாக ஒரு முறை பார்த்த பிறகே இறந்திருக்கிறார்.

மெட்டி ஒலி நாடகத்தில் திருமுருகனின் மனைவி விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் உமா மகேஸ்வரி. அந்த நாடகத்தில் உமாவின் அக்கா வனஜாவும் நடித்திருந்தார். கால்நடை மருத்துவரை திருமணம் செய்து கொண்ட பிறகு வர்த்தகம் செய்து வந்தார் உமா. திருமணத்திற்கு பிறகு தனக்கு நாடக வாய்ப்புகள் வரவில்லை என்று கூறி வருத்தப்பட்டார்.

இந்நிலையில் அக்டோபர் 17ம் தேதி உமா காலமானார். 40 வயதான உமா இறந்த செய்தி அறிந்த சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே உமாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. இதனால் அவர் ஈரோட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தன் குடும்பத்தார் அனைவரையும் ஈரோட்டுக்கு வந்து தன்னை பார்க்குமாறு தொடர்ந்து கூறியிருக்கிறார்.

இதையடுத்து குடும்பத்தார் அக்டோபர் 17ம் தேதி காலை ஈரோட்டுக்கு சென்றார்கள். அவர்களை பார்த்த உமா, என்னை பார்க்க வந்துவிட்டீர்களா என்று கேட்டிருக்கிறார். அனைவரையும் பார்த்த பிறகு அவரின் உயிர் பிரிந்துவிட்டதாம்.