சுவாரஸ்யம் குறைந்த ‘இன்ஷா அல்லாஹ்’ திரைப்படம்!

download 48
download 48

இஸ்லாமின் ஐந்து கடமைகள் பற்றி கூறும் படம் இன்ஷா அல்லாஹ். தம்பிக்கு சொத்தில் பங்கு தராமல் ஏமாற்றிய பணக்காரன் நரகத்தின் பாதைக்கும், அனாதையாக இருந்தாலும் பள்ளிவாசலில் பணிவிடை செய்த ஆதரவற்ற மனிதர் சொர்க்கத்தின பாதைக்கும் செல்வார்கள் என்பதை கதை வலியுறுத்துகிறது. அத்துடன் படத்தில் சில கிளைக் கதைகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஆதரவற்று பிச்சை எடுத்து திரியும் முதிய தம்பதி, இந்து மதத்தை சேர்ந்த பணக்கார பெண்ணை காதலித்து மணந்த இஸ்லாம் வாலிபன் என்று கிளைக்கதை தொடர்கிறது. காட்சிகள் எதுவும் நேரடி வசனங்களால் சொல்லப்படாமல் புரிதல் மூலமாக உணரும் வகையில் கட்டங்களை அமைத்திருக்கிறார்கள்.

அந்த புரிதல் பெரியதாக எடுபடவில்லை. பார்ப்பவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. சினிமாவாக உணரும் வகையில் காட்சிகள் அமையாதது வருத்தம். எல்லா காட்சிகளும் தத்ரூபமாகவே படமாக்கப்பட்டிருக்கிறது. காட்சிகள் படமாவது அதில் நடித்த சம்பந்தப்பட்ட நபர்களுக்காவது தெரியுமா என்பது கூட சந்தேகம் என்பதுபோல் இருக்கிறது.

மெலிதாக குழாயில் விழும் தண்ணீர் ஒரு குடம் நிறையும் வரை கேமராவை அசைக்காமல் சுமார் 3 நிமிடத்துக்கும் மேலாக காட்டும் காட்சி பார்வையாளர்களை சோதிக்கிறது.

விதவை பெண்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் புதிய சமுதாய அறக்கட்டளை வீடுகள் கட்டி தருவது என சமூக பணிகளை சமுதாயத்துக்கு வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்.

இசை என்ற தனி ஆவர்த்தனம் எதுவும் இல்லை எல்லாமே படப்பிடிப்பின்போது பதிவு செய்யப்பட்ட ஒலிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. கதையின் காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் மோகன், மேனகா இருவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.