புனீத் உதவிய 1800 மாணவர்களின் கல்விக்கு இனி நான் பொறுப்பு – விஷால்

samayam tamil 2
samayam tamil 2

புனீத் ராஜ்குமார் உதவி செய்து வந்த 1800 மாணவர்களின் படிப்பு செலவை தான் ஏற்பதாக விஷால் தெரிவித்துள்ளார்.

எனிமி பட விழாவில் விஷால் தெரிவித்த விஷயம் குறித்து அறிந்த அனைவரும் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கும் எனிமி படம் தீபாவளி பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் நடந்த எனிமி ப்ரீ வெளியீட்டு நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் தன் நண்பரான கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் பற்றி பேசினார்.

பிரபல கன்னட நடிகரான புனீத் ராஜ்குமார் அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். 46 வயதில் அவர் திடீர் என்று இறந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். புனீத் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் செய்து வந்த தான, தர்மங்கள் பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எனிமி பட விழாவில் விஷால் கூறியதாவது, புனீத் ராஜ்குமார் நல்ல நடிகர் மட்டும் அல்ல நல்ல நண்பரும் கூட. அவரை போன்ற அடக்கமான சூப்பர் ஸ்டாரை நான் பார்த்தது இல்லை. அவர் நிறைய நல்ல விஷயங்கள் செய்து வந்தார். புனீத் ராஜ்குமார் மூலம் இலவச கல்வி பெற்று வரும் 1800 மாணவர்கள் இனி என் பொறுப்பு. புனீத்தின் மறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்தலாமா, வேண்டாமா என்று யோசித்தோம் என்றார்.

புனீத் ராஜ்குமார் ஓவராக ஒர்க்அவுட் செய்ததால் தான் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் ஒர்க்அவுட் செய்ததால் அவர் இறக்கவில்லை என்று டாக்டர் ரமணா ராவ் தெரிவித்துள்ளார். புனீத் எப்பொழுதுமே ஓவராக ஒர்க்அவுட் செய்தது இல்லை என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.