செயற்திறனுடன் இருப்பேன், தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் நடிப்பேன் – மீரா ஜாஸ்மின்

NTLRG 20211102183605633651
NTLRG 20211102183605633651

தமிழில் ரன், புதிய கீதை, கஸ்தூரிமான், சண்டக்கோழி, பெண் சிங்கம் என பல படங்களில் நடித்தவர் மீரா ஜாஸ்மின். 2014ல் திருமணம் செய்து கொண்டவர். அதன்பிறகு சினிமாவில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் ஜெயராமை வைத்து சத்தியன் அந்திக்காடு இயக்கிவரும் புதிய படத்தில் நாயகியாக நடித்து மீண்டும் சினிமாவிற்குள் வந்துள்ளார் மீரா ஜாஸ்மின். இவர் இயக்கத்தில் ஏற்கனவே ரசதந்திரம், வினோத யாத்ரா உட்பட நான்கு படங்களில் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் துபாயில் மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சினிமாவில் எனது இரண்டாவது ஆட்டத்தை தற்போது தொடங்கியுள்ளேன். முன்பு போலவே செயற்திறனுடன் இருப்பேன், அதேசமயம் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் மீரா ஜாஸ்மின்.