நானி படம் – மறுத்த சமந்தா

1 1
1 1

தற்போது புதுமுக இயக்குனர்கள் இருவர் இயக்கும் இரண்டு படங்களில் நடிக்கிறார் சமந்தா. அந்த இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது. இதுதவிர ஹிந்தியில் ஆடுகளம் டாப்சி தயாரிக்கும் படத்திலும் சமந்தா நடிப்பதாக இன்னொரு செய்தியும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தெலுங்கில் நானி நடிக்கும் தசரா என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில், அதே படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிப்பதாக இன்னொரு செய்தியும் வெளியானது. ஆனால் அந்த செய்தியை தற்போது சமந்தா தரப்பில் மறுத்துள்ளனர்.

நானியின் தசரா படத்தில் சமந்தா நடிக்கவில்லை. அதிலும் இரண்டாவது நாயகியாக அவர் நடிக்க மாட்டார். முக்கியத்துவம் வாய்ந்த கதாநாயகியாக மட்டுமே நடிப்பாராம்.