டிசம்பரில் வெளியாகும் விஜய் சேதுபதியின் அடுத்த படம்!

21 6083fc2bf3ea9 1
21 6083fc2bf3ea9 1

விஜய் சேதுபதி நடிப்பில் லாபம், அனபெல் சேதுபதி, துக்ளக் தர்பார் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் வருகிற டிசம்பர் மாதத்தில் வெங்கட கிருஷ்ண ரோக்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படம் திரைக்கு வர உள்ளது. விஜய் சேதுபதியுடன் மேகா ஆகாஷ், மகிழ்திருமேனி, விவேக், மோகன் ராஜா, கருபழனியப்பன் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் முதல்காட்சி வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக இருப்பதாக புதிய புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனபோதிலும் டிசம்பரில் எந்த தேதியில் படம் வெளியாகிறது என்பது குறித்த தகவல் அந்த படத்தில் இடம்பெறவில்லை. டிசம்பர் வெளியீடு என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள். மேலும் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வந்த விஜய் சேதுபதிக்கு சமீபத்தில் வெளியான மூன்று படங்களும் அடுத்தடுத்து தோல்விகளை கொடுத்த நிலையில் இந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் ஹிட் படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.