புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உதயநிதி

1586854228 8978
1586854228 8978

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மறைவுக்கு இந்திய திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

அவரது இறப்பு ரசிகர்களுக்கும் சினிமா துறையினருக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது

மறைவுக்கு நேரில் செல்ல முடியாத நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிஐயில், இன்று நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர் அன்பில் பொய்யாமொழியும் அஞ்சலி செலுத்தினார்.