வந்தாள் வென்றாள் என நயன்தாராவை வாழ்த்திய சமந்தா!

maxresdefault 1 3
maxresdefault 1 3

தென்னிந்திய சினிமாவில் கடந்த 16 வருடங்களாக நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இன்று அவரது பிறந்தநாள். தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நயன்தாராவின் பிறந்தநாளை நள்ளிரவு 12 மணிக்கு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் சமந்தாவும் இன்னொரு கதாநாயகியாக நடித்துவருகிறார். நேற்றைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அதில் சமந்தாவும் கலந்துகொண்டார். பின்னர் அந்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா “அவள் வந்தாள்.. அவள் பார்த்தாள்.. அவள் துணிந்தாள்.. அவள் கனவு கண்டாள்.. அவள் நிகழ்த்தினாள்.. அவள் சாதித்தாள்” என்று நயன்தாராவை புகழ்ந்து தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.