சூர்யாவுக்கு மீண்டும் ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

surya kerrthi d 600 09 1473418909
surya kerrthi d 600 09 1473418909

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியானது, இப்படத்தில் அவர் சூப்பர்ஸ்டாருக்கு ரஜினி தங்கையாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் சாணி காயிதம் திரைப்படம் வெளியாகவுள்ளது. தெலுங்கில் குட் லக் சகி, மலையாளத்தில் மரைக்காயர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

இதனிடையே தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் பணிகள் மும்மரமாக நடந்துவருகிறது. இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.