விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் கவுதம் மேனன்!

நடிகர் விஜய் சேதுபதிக்கு வில்லனாக இயக்குனர் கவுதம் மேனன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன்.சி.புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து மைக்கேல் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்த திரைப்படத்தில் இளம் நடிகரான சந்தீப் கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதேநேரம் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் கவுதம் மேனன் வில்லனாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.