ரூ. 7 லட்சம் பணத்துடன் பிக் பொஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்!

biggbos 5 2852021m
biggbos 5 2852021m

சின்னத்திரையின் வெற்றிகரமாக நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பொஸ். இதனுடைய 5வது கட்டம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் கமல் ஹாசனுக்கு பதிலாக வேறுஒருவர் பிக் பொஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.

பிக் பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு, வாரத்தின் அடிப்படையில் சம்பளம் பேசப்பட்டுள்ளது.

அப்படி, கடந்த வாரம் பிக் பொஸ் வீட்டை விட்டு வெளியேறிய இசைவாணிக்கு, ஒரு வாரத்திற்கு ரூ. 1 லட்சம் சம்பளம் என்று பேசப்பட்டிருந்ததாக தெரிவிக்கின்றனர்.

அதன் அடிப்படையில், 49 நாட்கள் வீட்டிற்குள் இருந்து வெளியேறிய இசைவாணி, ரூ. 7 லட்சம் சம்பளத்துடன் பிக் பொஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்று தெரியவருகிறது.