நயன்தாராவுடன் இணையும் அனுபம்கெர் – இது அவரது 522வது படம்!

NTLRG 20211125184436769361
NTLRG 20211125184436769361

மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் கனெக்ட் படத்திலும் தற்போது கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நயன்தாரா. இந்த படத்தில் நயன்தாராவுடன் சத்யராஜ் மற்றும் பொலிவுட் நடிகர் அனுபம்கெர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில் அனுபம்கெர், ‛‛நான் நடிக்கும் 522வது படம் நயன்தாராவின் கனெக்ட். நல்ல கதையில், பிடித்தமான குழுவுடன் இணைந்திருக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக விக்னேஷ் சிவன், நயன்தாரா, அஸ்வின் சரவணன் ஆகியோருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். அதோடு, விக்னேஷ்சிவன், அஸ்வின் சரவணனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.