லிடியனிடம் தோனியின் தலைக்கவசம்!

1539954442 5781 2
1539954442 5781 2

இளம் வயதில் வேகமாக இசையமைத்து சாதனை படைத்தவர் லிடியன் நாதஸ்வரம். தற்போது மலையாளத்தில் மோகன்லால் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் முனாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும், சென்னை சூப்பர் சிங்கிஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனியின் தலைக்கவசம், லிடியனுக்கு கிடைத்துள்ளது.

இதுகுறித்து லிடியன் கூறுகையில், ‛‛சிஎஸ்கே அணியில் தோனி அணிந்த இது. அதேபோல் அவர் கையெழுத்திட்டு கொடுத்த துடுப்பு இது. இரண்டையும் எனக்காக பரிசாக கொடுத்தார் என தெரிவித்துள்ளார்.

இதுப்பற்றி லிடியனின் தந்தை வர்ஷன் கூறுகையில், ‛‛துபாய் சென்றிருந்தபோது கிரிக்கெட்டர் தினேஷ் கார்த்திக்கை பார்த்தோம். நாங்கள் அங்கு சென்ற சமயம் தோனி சென்னை வந்துள்ளார். லிடியன் இல்லையா என கேட்டுள்ளார். பிறகு துபாயில் தொடர்பு கொண்டு அந்த தலைக்கவசம், பேட்டை தினேஷ் கார்த்திக் மூலம் வழங்க ஏற்பாடு செய்தார். விரைவில் தோனியை சந்திக்க உள்ளோம்” என்றார்.