மகேஷ் பாபுவுக்கு திடீர் அறுவை சிகிச்சை?

download 7
download 7

 ‘சர்காரு வாரி பாட்டா’ படப்பிடிப்பின்போது மகேஷ் பாபுவின் காலில் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துவரும் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நாயகியாகக் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.  தமன் இசையமைத்துவரும் இந்தப் படத்தை மகேஷ் பாபு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 14 ரீல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன. 

ஹைதராபாத், துபாய், ஸ்பெயின் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

சமீபத்தில் ‘சர்காரு வாரி பாட்டா’ படப்பிடிப்பின்போது மகேஷ் பாபுவின் காலில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஹைதரபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இதற்காக மகேஷ் பாபு சிகிச்சை பெற்றதாகவும், அப்போது மகேஷ் பாபுவின் காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அறுவை சிகிச்சைக்காக  அவர் அமெரிக்கா செல்ல வேண்டி ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மகேஷ் பாபு குணமாகும் வரை அவருக்கான காட்சிகளின் படபிடிப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.