திரையரங்குகளில் வெளியாகும் 6 தமிழ்ப் படங்கள்!

1638527481 raja collure 2 2 150x150 1
1638527481 raja collure 2 2 150x150 1

சிவகார்த்திகேயனின் டாக்டர், ரஜினிகாந்த்தின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு ஆகிய படங்கள் வெற்றிபெற்று, திரையரங்குகளை நோக்கி மீண்டும் ரசிகர்கள் வருவதற்கு காரணமாக அமைந்தன. இதனால் திரைப்படங்களை வெளியிட தயங்கியவர்கள் கூட, தைரியமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் 6 படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில், பிரபு தேவாவின் தேள், ஷாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ், ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இந்தியன், பிக்பொஸ் சாண்டி மற்றும் கௌதம் மேனனின் 3:33, மற்றும் க் ஆகிய படங்கள் வருகிற 10 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளன.