வீதியில் இறந்து கிடந்த தமிழ் சினிமா பிரபலம்!

IMG 20211208 WA0036 1
IMG 20211208 WA0036 1

‘மாநகர காவல்’ திரைப்படத்தின் இயக்குநர் எம்.தியாகராஜன் காலமானார். ‛வெற்றி மேல் வெற்றி’, ‛பொண்ணு பார்க்க போறேன்’, ஏ.வி.எம்.ன் 150-வது படமான விஜயகாந்த் நடித்து வெளியான ‛மாநகர காவல்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம்.தியாகராஜன் உடல் நலக்குறைவால் இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோக்கு எதிரே இருந்த சாலையில் இறந்து கிடந்தார். உடனடியாக , அவர் உடலை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் ஒப்படைத்தனர். சினிமாவை நம்பி ‘மாநகர காவல்’ என்கிற திரைப்படத்தை எடுத்த இயக்குநர் இறுதியில் இறந்த பின்பு மாநகர காவலர்களால் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.