விஜய்யின் பீஸ்ட் படத்தை பார்த்த முதல் நபர்.. வெளிவந்த முதல் விமர்சனம்!

22 624eb87d5787d
22 624eb87d5787d

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் பீஸ்ட்.

விஜய்யுடன் இணைந்து செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பீஸ்ட் படம், வருகிற 13ஆம் திகதி வெளியாகிறது.

பீஸ்ட் படத்தை முதல் ஆளாக இசையமைப்பாளர் அனிருத் பார்த்துவிட்டதாக நெல்சன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில், பீஸ்ட் படத்தை முதல் ஆளாக பார்த்துவிட்டு, தன்னிடம் படத்தை மிகவும் புகழ்ந்து பேசியதாக தெரிவித்துள்ளார் நெல்சன்.

இதன் மூலம், கண்டிப்பாக விஐய் ரசிகர்களுக்கு பீஸ்ட் திரைப்படம் செம ட்ரீட்டாக இருக்கும் என்று தெரிகிறது.