பீஸ்ட் – கேஜிஎப்-2 படத்திற்கு எத்தனை தியேட்டர்கள் ஒதுக்கீடு

202204081048102320 Tamil News Tamil cinema beast kgf2 movie theatre allotment list SECVPF
202204081048102320 Tamil News Tamil cinema beast kgf2 movie theatre allotment list SECVPF

கேஜிஎப்-2 படத்திற்கு 200 -250 திரையரங்குகள் ஒதுக்கப்படுவதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இரண்டு மிகப்பெரிய திரைப்படங்கள் ஒன்றாக திரைக்கு வெளிவர உள்ளது. அதில் முக்கியமாக நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13 ஆம் திகதி திரையரங்கில் வெளியாக உள்ளது. அதேபோல யாஷ் நடித்துள்ள கேஜிஎப்-2 படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகிறது.

பீஸ்ட் - கேஜிஎப்-2

பீஸ்ட் – கேஜிஎப்-2
இந்நிலையில், இந்த இரு படங்களுக்கான திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, ஏப்ரல் 13ஆம் திகதி வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்திற்கு 800 முதல் 850 திரையரங்குகளும், ஏப்ரல் 14ல் வெளியாகவுள்ள கேஜிஎப்-2  திரைப்படத்திற்கு 200 முதல் 250 திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.