பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா மரணத்திற்கு யார் காரணம்- திடுக்கிடும் தகவல் கூறிய ஹேமந்த்

images 1
images 1

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து மக்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகி சித்ரா.

இந்த தொடர் நாடகத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆசை நாயகியாக உயர்ந்த இவர் இந்த இடத்தை பிடிக்க நிறைய உழைத்துள்ளார். தனது உழைப்பால் அப்பா-அம்மாவை சந்தோஷமாக வாழ வைத்து வந்தார், இந்த இடம் பிடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று கூட ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

பல சாதனைகளை செய்ய துடித்துக் கொண்டிருந்த சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் திகதி கணவர் ஹேமந்துடன் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கிறார்.

அங்கு திடீரென சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவரது மரண செய்தி தமிழ் சினிமாவையே உலுக்கியது.

சித்ராவின் மரணத்தில் அரசியல் தலைவர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது என்றும் சித்ராவின் மரணத்திற்கு காரணமான அரசியல் தலைவரால் தனது உயிருக்கும் ஆபத்து உள்ளது என ஹேமந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பாட்டால் அந்த அரசியல் தலைவரின் பெயர் வெளியாகும் என்று கூறியுள்ள ஹேமந்த், சித்ரா மரணத்திற்கு காரணமான அவர்கள் தற்போது தனது உயிருக்கும் குறி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 தனது உயிருக்கு பாதுகாப்பு தேவை என்றும், உயிருக்கு பயந்து வழக்கறிஞர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ஹேமந்த்.