விக்னேஷசை சைக்கோ என்று திட்டிய நயன்தாரா: வெளியான ரகசியம்!

22 2
22 2

இயக்குனர் விக்னேஷ் சிவனை அவரது காதலியும் நடிகையுமான நயன்தாரா சைக்கோ என்று திட்டியுள்ள தகவல் தீயாய் பரவி வருகின்றது.தமிழ் திரையுலகில் இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் ஒரு நட்சத்திர ஜோடி நயன்தாரா-விக்னேஷ் சிவன்.

2015ம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து இவர் நானும் ரவுடி தான் என்கிற படத்தை இயக்கிய நிலையில், அப்படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது.

இந்த பட பணிகளின் போதே விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், பல நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சென்று வரும் புகைப்படங்களை தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நயன்தாரா, தன்னை நானும் ரவுடி தான் படப்பிடிப்பு தளத்தில் திட்டியதாக விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இருவருக்குமிடையே நெருக்கமான காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்த காட்சியில் நயன்தாராவை, விஜய் சேதுபதியுடன் அதிகமாக நெருக்கமாக இருக்குமாறு விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

அவர் சொன்னபடியே நயன்தாராவும் மிக நெருக்கமாக நின்றுள்ளார். அப்போது நயன்தாரா விக்னேஷ் சிவனை பார்த்து நான் இவ்வளவு நெருக்கமாக இவர்கூட இருக்கேனே உனக்கு இது ஓகேவா என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு விக்னேஷ் சிவன் எனக்கு இதில் எவ்வித பிரச்னையும் இல்லை என்று கூலாக பதிலளித்துள்ளார், இதனை கேட்ட நயன்தாரா அவரை நீ ஒரு சைக்கோ என்று கூறி இருக்கிறார்.

இந்தத் தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. மேலும் இவர்கள் இருவரின் திருமணம் இந்த ஆண்டில் கண்டிப்பாக முடிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.