இரவின் நிழல் படத்தின் “மாயவா தூயவா” பாடல் வெளியானது

202205041107042395 Tamil News Tamil cinema iravin nizhal movie song maayava thooyava song SECVPF
202205041107042395 Tamil News Tamil cinema iravin nizhal movie song maayava thooyava song SECVPF

பார்த்தீபனின் இரவின் நிழல் படத்தில் இருந்து மாயவா தூயவா பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது

நடிகரும் இயக்குனருமான பார்த்தீபன் நடித்து இயக்கியிருந்த ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. இதனை தொடர்ந்து பார்த்தீபன், ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரிகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து ‘அகிரா புரொடக்ஷன்ஸ்’ தயாரித்துள்ளது.

இரவின் நிழல்


சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பும் பெற்றது. இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் நேர்க்கோட்டில் அமையாத (Non-Linear) கதையம்சம் கொண்ட திரைப்படம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. 

இரவின் நிழல்


இந்நிலையில் ‘இரவின் நிழல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாயவா தூயவா’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரேயா கோஷல் குரலில் வெளிவந்திருக்கும் இப்பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.