கேஜிஎப் 2 பட நடிகர் திடீர் மரணம்!

22 62720382135e9
22 62720382135e9

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ம் திகதி வெளியான திரைப்படம் கேஜிஎப் 2. யஷ் நடிப்பில் கன்னடத்தில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் டப் செய்யப்பட்டு வெளியானது.

வெளியான நாள் முதல் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை. சொல்லப்போனால் அந்தந்த மொழிகளின் நடிகர்களின் பட சாதனைகளையே கேஜிஎப் 2 முறியடித்து வருகிறது.

ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது, தமிழகத்திலும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இப்படி படம் வசூல் வேட்டை நடத்துவதால் கொண்டாட்டத்தில் இருந்த படக்குழுவினருக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. அதாவது இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் மோகன் ஜுனேஜி உயிரிழந்துள்ளார்.

அவரது மரண செய்தி படக்குழுவை தாண்டி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.