டான் படத்தை பார்த்து கண்கலங்கிய -ரஜினிகாந்த்!

22 6285fcdcc9dfa
22 6285fcdcc9dfa

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் டான். 

பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த டான் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தற்போது வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

அதன்படி தற்போது வரை இப்படம் உலகளவில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் புரிந்து சாதனை படைத்திருக்கிறது.

மேலும் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான டாக்டர் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது, அப்படத்தை விட இந்த டான் திரைப்படம் அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சிவகார்த்திகேயன் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் ரஜினி டான் திரைப்படத்தை பார்த்து ரசித்ததாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது “சூப்பர் பா, நல்ல நடிப்பு, கடைசி 30 நிமிடங்கள் என்னால் கண்ணீரை தடுக்க முடியவில்லை” என சொன்னதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.