பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழா எப்போது.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

1754376 2
1754376 2

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்-1”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் திகதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

பொன்னியின் செல்வன் முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து “பொன்னியின் செல்வன்-1” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த கேள்விகளை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் எழுப்பி வந்தனர்.

பொன்னியின் செல்வன் சுவரொட்டிகள் இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, “பொன்னியின் செல்வன்-1” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு செப்டம்பர் 6-ஆம் திகதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கிள் நடைபெறும் என்று படக்குழு சுவரொட்டி ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-santa-15-movie-update-506344?infinitescroll=1