நயன்தாரா – விக்னேஷ் சிவன்:6 ஆண்டுகளுக்கு முன்பே ரகசிய திருமணம்!

22 634ae9a7c67fd
22 634ae9a7c67fd

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும், தங்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

வாடகை தாய் மூலம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில், பல்வேறு சர்ச்சைகள் சுற்ற தொடங்கியது.

இந்த பிரச்னை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் விசாரணை குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.

 நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விசாரணையின் போது இருவரும் விசாரணை குழுவிடம் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.

பின்னர் தங்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாகவும், கடந்த டிசம்பர் மாதமே வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளானர்.

6 ஆண்டுகளுக்கு முன்பே ரகசியமாக பதிவு திருமணம் செய்துகொண்டுள்ள ட்விஸ்டை கண்டிப்பாக ரசிகர்கள் எதிர்பார்க்க வில்லை.

மேலும் இவர்கள் சமர்ப்பித்த ஆதாரங்களும், வாடகை தாய் குழந்தை விவகாரத்திற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாகவே உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருவரும் பெற்றோர் ஆனதாக கூறிய அதிர்ச்சியில் இருந்தே இன்னும் சில ரசிகர்கள் மீளாத நிலையில், 6 வருடத்திற்கு முன்பே திருமணம் நடந்ததாகவும் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.