மீண்டும் வெளியான ரஞ்சிதமே பாடல்.. வைரலாக்கும் ரசிகர்கள்

500x300 1788909 2
500x300 1788909 2

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘வாரிசு’ திரைப்படம் சங்கராந்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ தமிழ் பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. இப்பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது

தெலுங்கில் உருவாகியுள்ள ‘ரஞ்சிதமே’ பாடல் இன்று (30.11.2022) காலை 9.09 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், சரியாக வெளியிடப்பட்டது. இந்த பாடலை அனுராக் குல்கரனி மற்றும் எம்.எம்.மானசி இணைந்து பாடியுள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.