நாயை மையமாக வைத்த – அன்புள்ள கில்லி

i3 3
i3 3

நடிகை சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா நடிக்கும் படம் அன்புள்ள கில்லி. பாலசுப்பிரமணியம், ஒளிப்பதிவு செய்ய, அரோல் குரோலி இசை அமைக்கிறார். இந்தப் படம் நாய்க்கும், மனிதனுக்குமான உறவை சொல்லும் படம். இதில் லாபர்டா வகை நாய் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறது. அந்த நாயின் பெயர்தான் கில்லி.

படத்தின் நாயகன் மைத்ரேயா விஜய் ரசிகராக நடிதுள்ளார்.

அத்துடன் சினிமாவில் நடித்து புகழ்பெற்ற நாய்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளன. நாயின் பார்வையில் கதை நகரும், நாயே கதையை சொல்லும், தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது.

அன்புள்ள கில்லி படத்தில் பணிபுரிந்திருக்கும் அனைவரின் சுய வாழ்வும் ஒரு வகையில் இப்படத்தில் பிரதிபலித்திருக்கிறது.

ஏனெனில் அனைவருமே செல்லப்பிராணி வளர்ப்பவர்கள். ஒரு வகையில் அவர்களின் வாழ்வுதான் இந்தக்கதை. நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். முக்கியமாக அனைவரும் குடும்பத்துடன் தியேட்டரில் ரசித்து பார்க்கும் படமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் இப்படத்தை கொண்டாடுவார்கள்.