தனி இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறார் தமன்னா

unnamed 4
unnamed 4

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா திரையுலகத்திற்கு வந்து நேற்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது.

2005ம் ஆண்டின் கடைசியில் வெளிவந்த தெலுங்குப் படமான ‘ஸ்ரீ’ படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 2006ல் வெளிவந்த ‘கேடி’ படம் மூலம்தான் தமிழில் அறிமுகம். ஆனாலும், 2007ல் வெளிவந்த ‘கல்லூரி’ படம் அவரை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு போய் சேர்த்தது.

தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ‘பாகுபலி’ படத்தின் முதல் பாகத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தற்போது இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்து அடுத்து தெலுங்கில் வெளிவர உள்ள படம் ‘தட் இஸ் மகாலட்சுமி’

நயன்தாரா, த்ரிஷா, காஜல் அகர்வால், ஹன்சிகா என பல போட்டிகள் இருந்தாலும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அவருக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறார் தமன்னா. 15 ஆண்டுகளாக தொடர்ந்து அப்படியே இருப்பது ஒரு சாதனைதான்.