அருண் விஜய்யுடன் இணைகிறார் அறிவழகன்

i3 10
i3 10

ஷங்கரின் உதவியாளரான அறிவழகன், ஈரம் படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன்பிறகு வல்லினம், ஆறாது சினம் படங்களை இயக்கினார். அருண் விஜய்க்கு திருப்புமுனை தந்த படமான குற்றம் 23 படத்தை இயக்கினார். தற்போது 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அருண் விஜய்யுடன் இணைகிறார் அறிவழகன்.

அருண் விஜய்யின் 31வது படம் இது. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் ரெஜினா அருண் விஜய்யுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்.

ஸ்டெஃபி படேல், பகவதி பெருமாள் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் சி.எஸ். இசை அமைக்கிறார். சென்னை, டில்லி, ஆக்ரா, ஐதராபாத் பகுதிகளில் படமாகிறது.