‛மாஸ்டர்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா

i3 3 2
i3 3 2

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‛மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன.

இந்நிலையில் வருகிற 15ம் திகதி சென்னையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

எப்போதுமே தனது படங்களின் இசை விழாவை ரசிகர்கள் முன்னிலையில் நடத்தும் விஜய் இந்த முறை ஏனோ ரசிகர்களை தவிர்த்துள்ளார்.

ஆனபோதும் தனது பட விழாவை ரசிகர்கள் கண்டுகளிக்க வேண்டும் என்பதற்காக அதை நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் தகவல் இதுவரை வெளியாகவில்லை. இப்போது வரை இரகசியமாக வைத்திருக்கிறார். அதனால் மாஸ்டர் பாடல் வெளியீடு விழாவின் போது அந்த படத்தை இயக்குவது யார்? என்பது குறித்த தகவலை அவர் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.