தமன்னாவிற்கு தமிழில் படங்கள் இல்லை

i3 4 2
i3 4 2

.
15 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் தமன்னாவிற்கு தற்போது தமிழில் படங்கள் இல்லை. ஆனால் தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்கிறார். அதோடு புதிய படங்களுக்காக தீவிர பட வேட்டையிலும் ஈடுபட்டுள்ளார்.

அவர் அளித்த ஒரு பேட்டியில், இந்திய திரையுலகில் தன்னை மிகவும் கவர்ந்த ஹீரோக்களாக ஹிருத்திக் ரோஷன், விக்கி கவுசல், பிரபாஸ் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் ஹிருத்திக் ரோஷன் சிறுவயதில் இருந்தே தன்னை கவர்ந்த ஹீரோ என்று ஏற்கனவே கூறிவந்துள்ள தமன்னா, அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதாக சில பேட்டிகளில் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.