வால்டர் கதை கேட்டு அதிர்ச்சி ஆனேன்: ஷெரின்

i3 2 2
i3 2 2

‛நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ மூலம், தமிழுக்கு வந்தவர் ஷெரின் காஞ்ச்வாலா. தற்போது சிபிராஜ் ஜோடியாக ‛வால்டர்’ படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது.

இயக்குனர் அன்பு முதன்முதலாக என்னிடம் கதையை கூறியபோது அதிர்ச்சியானேன். காரணம் கலங்கடிக்கும் ஒரு குழந்தை கடத்தல் சம்பவத்தை கூறிவிட்டு இது உண்மை கதை என்றார். நாட்டில் இப்படி எல்லாம் நடக்குமா என்று கலங்கி விட்டேன். சமூக நோக்கமும், விழிப்புணர்வும் தரும் ஒரு படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி.