பிக்பாஸ் சீசன் 4ல் அபிராமி

i3 4 3
i3 4 3

விளம்பர படங்கள் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த போதும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி. இந்நிலையில் தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் சேட் செய்தார் அபிராமி. அப்போது நடிகை ஷெரின் உள்ளிட்டோர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர். ரசிகர் ஒருவர் பிக்பாஸ் 4ம் சீசன் பற்றி அபியிடம் கேட்டார். அதற்கு, “ஐயய்யோ மறுபடியும் பிக்பாஸ்-ஆ. வேற ஏதாவது பேசலாமே”, என மழுப்பலாக பதில் கூறினார்.

எப்படி இருந்தாலும் முந்தைய சீசன்களில் கலந்து கொண்டவர்களை அடுத்த சீசனில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க வைப்பது பிக்பாஸ் ஸ்டைல். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4ல் அபிராமி கலந்து கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.