ராகவா லாரன்ஸ் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை

i3 8 1
i3 8 1

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம் ஒன்றை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் தயாரிக்கிறார். இவர், ஜிகர்தண்டா, ஆடுகளம், பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களை ஏற்கனவே தயாரித்தவர். ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் அந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்ற ஜி.வி.பிரகாஷ்குமார் மட்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

சக நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் பெயர் கூட சூட்டப்படாத அந்த புதிய படம் குறித்த முழுமையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எஸ்.கதிரேசன் தெரிவித்திருக்கிறார்.