அமலாபால் பாடகர் இரகசிய திருமணம்

i3 2 4
i3 2 4

‘மைனா’ படத்தின் மூலம் நாயகியாக பிரபலமானவர் கேரளத்தைச் சேர்ந்த மலையாள நடிகை அமலா பால். தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். அவருக்கும் இயக்குனர் விஜய்க்கும் திருமணம் நடந்து அது விவகாரத்தில் முடிந்தது.

நேற்று திடீரென சமூக வலைத்தளத்தில் ஹிந்தி பின்னணி பாடகர் பன்விந்தர் சிங், நடிகை அமலா பாலைத் திருமணம் செய்து கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டார். உடனடியாக இந்த விவகாரம் பரபரப்பானது. பலரும் அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்தனர்.

ஆனால், அவற்றை பன்விந்தர் சிங் தற்போது நீக்கிவிட்டார். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறது. திருமணத்திற்குப் பிறகும் நடிக்க வந்த அமலா பால் தற்போதும் சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் திடீரென இரண்டாவது திருமணம் செய்து கொண்டது திரையுலகத்தினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.