தியேட்டர்களை மூடியதால் சிலருக்கு கொள்ளை இலாபம்

1d 1
1d 1

உலகம் முழுவதும் கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தையும் மூடச் சொல்லி உத்தரவிட்டுள்ளார்கள். அதில் சினிமா தியேட்டர்களும் உள்ளடங்கும் .

பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா. தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்க்க முடியாமல் பல சினிமா ரசிகர்கள் தவித்து வருகிறார்கள். பல திரைப்படங்களின் வெளியீடுகள் தள்ளிப் போய்விட்டன.

இருந்தாலும், தியேட்டர்களை மூடியதால் நெட் பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல ஓ.டி.டி தளங்களுக்கு லாபம் ஆஅதிகரித்துள்ளது.

தொலைக்காட்சிகளில் புதிய படங்களைப் போட்டால் கூட நாம் விரும்பிய படங்களைப் பார்க்க முடியாது. அதனால், பலரும் தற்போது புதிதாக இந்த ஓ.டி.டி தளங்களை சப்ஸ்கிரைப் செய்து புதிய படங்களைப் பார்த்து வருகிறார்கள்.

பலரது சமூக வலைத்தளப் பக்கங்களில் இந்தப் படத்தைப் பார்த்தேன், அந்தப் படத்தைப் பார்த்தேன் என்றுதான் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். சினிமா தியேட்டர்களை மூடிய இந்த இடைவெளி, இந்த ஓடிடி தளங்களுக்கு ஒரு வளர்ச்சியாக அமைந்துவிட்டது.