அனுமதியின்றி டிவியில் கேஜிஎப் படம் ஒளிபரப்பு

i3 2 2
i3 2 2

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கன்னட மொழியில் உருவாகி தமிழ், இந்தி உட்பட சில மொழிகளிலும் வெளியாகி வெற்றியை பெற்ற படம் கேஜிஎப். சாப்டர்-1. இந்தப்படத்தில் கதாநாயகனாக கன்னட நடிகர் யஷ் நடித்திருந்தார் கோலார் தங்க சுரங்கத்தில் பலகாலமாக இருந்துவரும் அடிமை முறையை இந்த படம் அப்பட்டமாக பறைசாற்றியது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது.,

தெலுங்கில் கேஜிஎப் படத்தின் டிவி ஒளிபரப்பு உரிமை இன்னும் யாருக்கும் விற்கப்படாத நிலையில் இந்தப்படத்தின் தெலுங்கு பதிப்பை அங்குள்ள தெலுங்கு சேனல் ஒன்று அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக கேபிள் மூலம் ஒளிபரப்பியுள்ளது. இதை அறிந்த கேஜிஎப் படத்தின் தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸில் புகார் அளித்துள்ளார்.