திருமணம் எப்போது?: பிக்பாஸ் ஐஸ்வர்யா!!

i3 2 4
i3 2 4

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் அடைபட்டிருக்கும் மக்களுக்கு, சமூகவலைதளங்களில் தங்களுக்கு பிடித்த நடிகர்களுடன் நேரடியாக உரையாற்றுவது மிகப்பெரிய பொழுதுபோக்காக இருக்கிறது. பல நடிகர், நடிகையர் ரசிகர்களின் எண்ணத்தை புரிந்துகொண்டு அவர்களுடன் அடிக்கடி நேரடியாக கலந்துரையாடி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா தத்தா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், “எப்போது திருமணம் செய்ய போகிறீர்கள்” எனக் கேட்டார். அதற்கு “வாழ்க்கையில் செட்டிலான பிறகு தான்”, என ஐஸ் பதிலளித்தார்.

“எல்லோரும் கல்யாணமாகி தான் செட்டிலாவார்கள். நீங்க என்ன வித்தியாசமாக செட்டிலாகிட்டு கல்யாணம் செய்வேன்னு சொல்லுறீங்க”, என ஐஸ்வர்யாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும் ரசிகர் ஒருவர், ” நீங்க ஏற்கனவே திருமணம் ஆனவரா”, எனக் கேட்டுள்ளார். அதற்கு, “என்ன பார்த்தா அப்டி தெரியுது?”, என அதிர்ச்சியாகியுள்ளார் ஐஸ்.