ஜிவி.பிரகாஷ் – கவுதம் மேனனின் ‘செல்பி’

i3 3 6
i3 3 6

கே.புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜராஜன் தயாரிக்கும் புதிய படத்தில் ஜிவி.பிரகாஷ் நாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக 96, பிகில் படங்களில் நடித்த வர்ஷா பொல்லமா நடிக்கிறார்.

இவர்களுடன் முக்கியமான வேடத்தில் இயக்குனர் கவுதம் மேனனும் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷே இசையமைக்கவும் செய்கிறார்.

இப்படத்திற்கு செல்பி என பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த மதிமாறன் புகழேந்தி இப்படத்தை இயக்குகிறார்.

கல்லூரி மாணவன் ஒருவனுக்கு கல்லூரிக்கு வெளியே ஏற்படும் இன்னல்களை சொல்லும் விதமாக இப்படம் தயாராகிறது. ஜிவி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார்.